திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழு வாங்கிய கடன் ரத்து: மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

0 3835
திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழு வாங்கிய கடன் ரத்து: மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிபட்டியில் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக்கொண்டார். 1330 திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்பித்த 6 வயது சிறுவன் பட்டீஸ்வரனுக்கு சால்வை அணிவித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

பள்ளியில் ப்ரெயிலி முறையில் பார்வையற்றவர்கள் படிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சூலூரைச் சேர்ந்த கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி சிறுமி மைதிலி கோரிக்கை விடுத்தார்.

பிரச்சார நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், மக்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கையே தனது மிகப்பெரிய சொத்து என்றார். கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments