மத்தியப் பிரதேச முதலமைச்சர் தங்கிய விருந்தினர் இல்லத்தை முறையாகப் பராமரிக்காத அலுவலர் பணியிடை நீக்கம்

0 1685
மத்தியப் பிரதேச முதலமைச்சர் தங்கிய விருந்தினர் இல்லத்தை முறையாகப் பராமரிக்காத அலுவலர் பணியிடை நீக்கம்

த்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் தங்கிய அரசு விருந்தினர் இல்லத்தில் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்தாத பொதுப்பணித்துறை அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாயன்று சித்தி என்னுமிடத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கியபோது கொசுத் தொல்லை இருந்துள்ளது. அதில் இருந்து காத்துக் கொள்ளக் கொசுவலை கூட இல்லை.

இது குறித்துக் கூறியதும் இரவு இரண்டரை மணியளவில் கொசுவிரட்டி மருந்து தெளித்துள்ளனர். அந்தக் கட்டடத்தில் உள்ள தண்ணீர்த் தொட்டி அதிகாலை 4 மணிக்கு நிரம்பி வழிந்தபோது முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானே மோட்டாரை நிறுத்தியுள்ளார்.

இது குறித்துப் பொதுப்பணித்துறையில் அவர் புகார் அளித்ததையடுத்து விருந்தினர் இல்லத்தை முறையாகப் பராமரிக்காத அலுவலர் பாபுலால் குப்தா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments