காந்திக்கு சிலை அமைக்க எதிர்ப்பு... எம்.பி. ஜோதிமணி கைது

0 13860
காந்திக்கு சிலை அமைக்க எதிர்ப்பு... எம்.பி. ஜோதிமணி கைது

கரூரில் மகாத்மா காந்திக்கு புதிதாக முழு உருவ சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாக மறுத்த காரணத்தினால் போலீசார் குண்டு கட்டதாக தூக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

கரூர் லைட்ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் 70 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை பராமரிப்பு இன்றி மிகவும் பழுதடைந்து சிதிலம் அடைந்த நிலையில் இருந்தது. இதனால் அந்த பழைய மார்பளவு சிலையை அகற்றிவிட்டு மகாத்மா காந்திக்கு கரூர் நகராட்சி சார்பில் முழு உருவச் சிலை வைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் காந்திக்கு புதிதாக சிலை அமைக்க கூடாது என்று கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதி மணி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். மேலும் தனது ஆதரவாளர்களுடன் புதிதாக காந்தி சிலை அமைக்கப்பட்டு வரும் இடத்திற்கு வந்து ஜோதிமணி தர்ணாவில் ஈடுபட்டார்.

ஜோதிமணியின் தர்ணாவால் புதிதாக காந்தி சிலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடபடக்கூடாது என்று ஜோதிமணியிடம் எடுத்துக்கூறினர். அதற்கு காந்தி சிலை உரிய தரத்துடன் அமைக்கப்படவில்லை என்றும் காந்தி சிலையை புதிதாக அமைப்பது குறித்து தன்னிடம் கலந்து ஆலாசிக்கவில்லை என்று கூறி வாக்குவாதம் செய்தார்.

ஒரு கட்டத்தில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றால் தான் காந்தியடிகளுக்கு புதிதாக சிலை அமைக்க முடியும்எ ன்று போலீசார் ஜோதிமணியிடம் எடுத்துக்கூறினர். ஆனால் அதனை ஏற்காமல் ஜோதிமணி தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பெண் போலீசார் அவரை கைது செய்ய வந்த போது ஒத்துழைக்க மறுத்து தர்ணாவை தொடர்ந்தார். வேறு வழியின்றி போலீசார் ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கினர். ஆனாலும் வர மறுத்து இரண்டு முறை தரையில் அமர்ந்த ஜோதிமணியை போலீசார் தங்கள் முழு பலத்தையும் பிரயோகித்து வேனுக்குள் கொண்டு சென்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு,விடுவிக்கப்பட்டனர்.

வேனுக்குள் கொண்டு சென்ற பிறகும் கீழே அமர்ந்த ஜோதிமணி தர்ணாவை தொடர்ந்தார். இதனை அடுத்து அவரை அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். சிதிலம் அடைந்த காந்தி சிலையை மாற்றிவிட்டு புதிதாக சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் அரசியல் காரணங்களுக்காக ஜோதிமணி எதிர்ப்பு தெரிவிப்பதாக கரூர் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments