மதுரை-நெல்லை இடையே இரட்டை அகல ரெயில்பாதை பணி: ரயில்போக்குவரத்தில் மாற்றம்

0 37855
மதுரை-நெல்லை இடையே இரட்டை அகல ரெயில்பாதை பணி: ரயில்போக்குவரத்தில் மாற்றம்

மதுரை-நெல்லை இடையே இரட்டை அகல ரயில்பாதை பணிக்காக தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை-கங்கைகொண்டான் மற்றும் கோவில்பட்டி-கடம்பூர் ரயில்பாதை இணைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 28ஆம் தேதி வரை இருமார்க்கங்களிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை- நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 23 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை மதுரை வரை மட்டும் இயக்கப்படுகிறது. மதுரை வழியாக கோவை வரை செல்லும் பகல்நேர சிறப்பு ரயில் வருகிற 24ஆம் தேதி 28ஆம் தேதி வரை இரு மார்க்கங்களிலும் மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது.

சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 24, 25, 26, 28 தேதி ஆகிய நாட்களில் விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம் வழியாக நெல்லைக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments