சீனாவைத் தொடர்ந்து அடுத்த வைரஸ் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ வாய்ப்பு இருப்பதாக தகவல்
சீனாவின் வூகான் சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதைப் போல அடுத்த வைரஸ் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
வூகான் சந்தையில் பல வன உயிரினங்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு உணவாக்கப்பட்டதால் கொரோனா பரவியதாகக் கூறப்படும் நிலையில், ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும் அதுபோன்று ஒலுவு என்ற பெயரில் சந்தை செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
சீனாவைப் போலவே இங்கும் அலங்குகள், வவ்வால்கள், குரங்குகள் ஏராளமாகப் பிடிக்கப்பட்டு உயிருடன் இருக்கும் போதே கொதிநீரில் மூழ்கடிக்கப்பட்டு உணவாகப் பரிமாறப்படுகிறது. இதற்காக சில உயிரினங்கள் சித்ரவதை செய்யப்படும் வீடியோவும் வெளியாகி உள்ளது.
இதையடுத்து சில உயிரினங்கள் மீட்கப்பட்டாலும் மக்களின் அறியாமையால் திருட்டுத்தனமாக வனஉயிரின வியாபாரம் தொடர்கிறது.
Comments