அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய குடியேற்ற மசோதா தாக்கல்: 8 லட்சம் இந்தியர்கள் பயனடைவர்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய குடியேற்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த குடியேற்ற மசோதாவின் முக்கிய நோக்கம் முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் 1 கோடியே 10 லட்சம் வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்குவதாகும்.
அத்துடன் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்காக வழங்கப்படும் கிரீன் கார்டு வழங்குவதில் உள்ள சிக்கல்களை களைவது மற்றும் எச்1 பி விசாதாரர்களுக்கு பணி அங்கீகாரம் வழங்குவது ஆகியவையும் இந்த மசோதாவின் முக்கிய அம்சமாகும்.
இந்த மசோதா சட்டமானால் அமெரிக்காவில் தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை பார்த்து வரும் சுமார் 8 லட்சம் இந்தியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments