இயல்-இசை- நாடகத் துறையினருக்கான கலைமாமணி விருது: முதலமைச்சர் இன்று வழங்குகிறார்
இயல்-இசை-நாடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு 2019 மற்றும் 2020 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்.
தலைமைச் செயலகத்தில் இன்று மாலை நடைபெறும் விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ராமராஜன், யோகிபாபு,ஐஸ்வர்யா ராஜேஷ் இசையமைப்பாளர் டி.இமான், இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் உள்ளிட்டோர் விருது பெறுகின்றனர்.
மூத்த கலைஞர்கள் சரோஜாதேவி, பி.சுசிலா, நடனக்கலைஞர் அம்பிகா காமேஷ்வர், சவுகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி , பார்வதி கண்டசாலா ஆகியோருக்கு ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.
Comments