தனிநபர் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் உறுதி
தனிநபர் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் மத்திய அரசுக்கு உறுதியளித்துள்ளது.
தனிநபர் தகவல், உரையாடல்கள் தொடர்பான விவரங்கள் குறித்த கொள்கையை வாட்ஸ் ஆப் நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. அடுத்த சில மணி நேரத்தில் மத்திய அரசுக்கு தனது முடிவை வெளிப்படுத்தி தனிநபர்களின் ரகசிய உரையாடல் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் தனது தகவல்களை பேஸ்புக்குடன் பகிர்ந்துக் கொள்ளப் போவதாக வாட்ஸ் ஆப் அறிவித்ததையடுத்து தனிநபர் உரிமைகள் பாதுகாப்பு குறித்து சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், தனிநபர் உரிமைகளைப் பாதுகாக்கும் வாட்ஸ் ஆப்பின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Comments