பருவநிலை மாற்றம் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்தது
பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்பன் வெளியேற்றம் போன்ற காரணங்களால் புவி வெப்பமயமாவதை தடுப்பதற்கான ஒப்பந்தத்தில் 200 நாடுகள் கையொப்பமிட்டன.
இந்த ஒப்பந்தம் காரணமாக கூடுதல் செலவு ஏற்படும் என்று கூறி, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியேறினார்.
இந்த நிலையில் புதிய அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, பருவநிலை மாற்றம் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கு ஜோபைடன் உத்தரவிட்டார்.
அதன்படி ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும் நிகழ்ச்சி காணொலி மூலம் நடைபெற்றது. விஞ்ஞானிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதர்களும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Comments