பிறந்த 7 நாட்களில் பெண் குழந்தை இறந்த வழக்கில் திருப்பம்... குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்ற பாட்டி கைது..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, பிறந்து ஏழு நாட்களே ஆன பெண்குழந்தையை கொன்ற வழக்கில் குழந்தையின் பாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கே.பாறைப்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி - சிவப்பிரியங்கா தம்பதிக்கு ஏற்கனவே 8 மற்றும் 3 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 10 ஆம் தேதி மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையின் முகத்தில் காயங்கள் இருந்ததால் காவல்துறையினருக்கும் மருத்துவர்கள் தகவல் அளித்தனர்.
இதற்கிடையே மூச்சு திணறடிக்கப்பட்டு குழந்தை இறந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையின் கழுத்தை நெரித்து பாட்டி நாகம்மாள் கொன்றது தெரிய வந்ததை அடுத்து அவரை கைது செய்தனர்.
Comments