திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா , 11 மாதங்களுக்கு பின்னர் பக்தர்கள் முன்னிலையில் வீதி உலா
திருப்பதியில் ரத சப்தமி விழாவை ஒட்டி 7 வாகனங்களில் மலையப்பசாமி வீதி உலா வந்தார்.
அந்த கோவிலில் 11 மாதங்களுக்கு பின்னர் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் காலையில் தொடங்கி இரவு வரை,
சூரிய பிரபை, சின்ன சேஷம், தங்க கருடன்,ஹனுமந்தம் கல்ப விருட்சம், சர்வபூபாலம், சந்திர பிரபை ஆகிய 7 வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி வீதி உலா வந்தார்.
மாடவீதிகளில் திரண்ட ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். இந்த விழாவை முன்னிட்டு பக்தர்கள் இன்றி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் நடைபெற்றது.
Comments