ஃபேஸ்புக் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடியுடன் கலந்தாலோசித்ததாக ஆஸி. பிரதமர் தகவல்
செய்தி கன்டன்டுகள் விவகாரத்தில் ஃபேஸ்புக்கின் நடவடிக்கை அச்சுறுத்தல் என குற்றம்சாட்டியுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் , இதுகுறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் கலந்தாலோசித்ததாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் செய்தி கன்டன்ட்டுகளை பயன்படுத்துவதற்கு ஊடக நிறுவனங்களுடன் ஒப்பந்தம்போட்டு பணம் தரவேண்டும் என்ற சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டு ஃபேஸ்புக் பக்கங்களில் செய்தி கன்டன்ட்டுகள் முற்றாக நீக்கப்பட்டன.
இது அச்சுறுத்தும் நடவடிக்கை எனக் கூறியுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், தனது நடவடிக்கையை ஃபேஸ்புக் திரும்பப்பெறுவதோடு, உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா என்ன செய்கிறது என்பதை அனைவரும் உற்றுக் கவனிக்கின்றனர் எனக் கூறியுள்ள ஸ்காட் மோரிசன், இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே பிரதமர் மோடி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருடன் கலந்தாலோசித்ததாக தெரிவித்துள்ளார்.
Comments