3-வதும் பெண்ணாக பிறந்ததால் பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையை கழுத்தை நெறித்துக் கொன்ற பெற்றோர் ? உசிலம்பட்டியில் தலைதூக்கும் பெண் சிசு கொலை கொடூரம்.!

0 2218

துரை, உசிலம்பட்டியில் முதல் இரண்டும் பெண் குழந்தையாக இருந்ததால், 3-வதாக பிறந்த குழந்தையை பெற்றோரே கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே.பாறைப்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி - சிவப்பிரியங்கா தம்பதிக்கு கடந்த 10-ம் தேதி 3-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. 2 நாட்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அது கொலை என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பெற்றோர் மீது கொலை வழக்குப்பதியப்பட்டு, கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments