அம்பாசடர் கார் பிறந்த இடம் ... கடைசி அடையாளமும் கரைந்தது!- தொழிற்சாலை ஐ.டி. பார்க்காக மாறுகிறது

0 115304
எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அம்பாசடர் கார்

இன்று எத்தனையோ வித விதமான கார்கள் சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கலாம். ஆனால், அம்பாசடர் கார் ஓடினால் மட்டும் நம்மை அறியாமலேயே திரும்பி பார்ப்போம். அத்தகையை அம்பாசடர் கார்களுக்கு முற்றிலும் முடிவுரை எழுதப்பட்டிருப்பதுதான் சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 1948 - ஆம் ஆண்டு கொல்கத்தாவில் அம்பாசடர் கார்களின் உற்பத்தியை தொடங்கியது. கொல்கத்தாவில் உத்தர்பாராவிலும் மத்திய பிரதேசத்திலுள்ள பிதாம்பூரிலும் தொழிற்சாலைகள் இருந்தன. சென்னை அருகே திருவள்ளுரிலும் அம்பாசடர் நிறுவனத்துக்கு தொழிற்சாலை உள்ளது. ஆண்டுக்கு இங்கிருந்து 12,000 கார்களை உற்பத்தி செய்ய முடியும். அம்பாசடர் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கொல்கத்தாவில்தான் இருந்தது.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இந்திய சாலைகளில் அம்பாசடர் கார்கள் ஆக்கிரமித்திருந்தன என்றாம் அது மிகையல்ல. அம்பாசடர் கார்கள் இடம் பெறாத தமிழ் படமே இல்லை என்றும் சொல்லாம். சாமானிய மக்களின் கார்களாக அம்பாசடர் பார்க்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு அதிகாரிகளும் பெரும்பாலும் இந்த ரக கார்களையே பயன்படுத்தி வந்தனர். வித்தியாசமான தோற்றமும் பாதுகாப்புக்கும் சிறப்பான காராக அம்பாசடர் பார்க்கப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆர் பயன்படுத்தி வந்த டிஎன்எக்ஸ் 4777 என்ற பதிவெண் கொண்ட அம்பாசடர் காரும் ரொம்பவே பிரபலம்.

image

இந்த நிலையில், கடந்த 1991 ஆம் ஆண்டு பொருளாதார கொள்கை தளர்வுகள் காரணமாக வெளிநாட்டு தயாரிப்பு கார்கள் இந்திய சந்தைக்குள் நுழைந்தன. மாருதி கார்களும் இந்திய சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க தொடங்கியிருந்தது. இதனால், அம்பாசடர் காரின் விற்பனை சரியத் தொடங்கியது. இதனால், 1998 ஆம் ஆண்டு ஜப்பானின் மிட்சுபிசி நிறுவனத்துடன் தொழில்நுட்ப தேவைகளுக்காக அம்பாசடர் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படிதான் இந்தியாவில் மிட்சுபிஷி நிறுவனத்தின் லேன்சர் கார் உற்பத்தியாகின.

அப்படி இப்படி என்று மூச்சை இழுத்து கொண்டு அம்பாசடர் நிறுவனம் ஓடிக் கொண்டிருந்தது. ஆனாலும், நவீன கார்களின் வருகையால் அம்பாசடர் கார் தன் ஓட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தியது. கடைசியாக 2014 ஆம் ஆண்டு அம்பாசடர் கிராண்ட் கிளாசிக் மாடல் காருடன்  தயாரிப்பை நிறுத்திக் கொண்டது. தொடர்ந்து, அம்பாசடர் என்ற பிராண்ட் நேமை பிரான்ஸை சேர்ந்த . Peugeot நிறுவனத்துக்கு ஹிந்ததுஸ்தான் நிறுவனம் ரூ. 80 கோடிக்கு விற்பனை செய்தது. Peugeot நிறுவனம் அம்சாடர் என்ற பிராண்ட்நேமுடன் இந்தியாவில் கார்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளதாகவும் சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை அமைக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

image

கொல்கத்தாவிலுள்ள உத்தர்பாரா அம்பாசடர் கார் தயாரிப்பு நிறுவனம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்ததாகும். அம்பாசடர் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டதிலிருந்து இந்த தொழிற்சாலை மூடியே கிடந்தது. இதற்கிடையே, ஹிந்துஸ்தான் நிறுவனத்தையும் பிர்லா குழுமம் வாங்கியது. கொல்கத்தாவிலுள்ள அம்பாசடர் தொழிற்சாலையை மும்பையை சேர்ந்த ஹிராநந்தினி குழுமம் வாங்கியுள்ளது அதில், ரூ. 10,000 கோடி மதிப்புக்கு ஐ.டி. பார்க் அமைக்கிறது. இந்த தொழிற்சாலையை தரைமட்டமாக்கி விட்டு 20 சதவிகிதம் பகுதியில் hyper-scale data centre park மற்றும் 8 0 சதவிகித பகுதியில் சேமிப்பு கிடங்காகவும் பயன்படுத்தப்படவுள்ளது.

இதானல், இந்தியர்களின் உணர்வுடன் நேரடியாக கலந்து விட்ட அம்பாசடர் காரின் கடைசி அடையாளமும் காற்றோடு கலக்கப் போகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments