மத்திய அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எம்.டெக். மேற்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1331
மத்திய அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எம்.டெக். மேற்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய 2 பட்ட மேற்படிப்புகளுக்கும் மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 49.9 சதவீத இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற நிர்பந்தித்ததால், 2 மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே அவகாசம் முடிந்துவிட்டாலும், மத்திய அரசின் 49.9 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தி கொள்ள ஏஐசிடிஇ ஒப்புதல் வழங்கியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்தாண்டு மத்திய அரசின் 49.9 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில்  மாணவர் சேர்க்கை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments