காரின் மேற்கூரையில் சடலத்துடன் 10 கி.மீ. பயணம் செய்த நபர் கைது
சாலையில் சைக்கிளில் சென்றவர் மீது மோதிய கார், அவரது உடலுடன் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணித்த சம்பவம் பஞ்சாப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மொஹாலியில் அதிவேகத்தில் சென்ற கார், சைக்கிளில் சென்றவர் மீது மோதியுள்ளது. மோதிய வேகத்தில் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்து, அவரது உடல் காரின் மேற்கூரையில் சென்று விழுந்துள்ளது.
ஆனால் காரை ஓட்டிச் சென்ற நபரோ காரை நிறுத்தாமல், மேற்கூரையில் சடலத்துடன் 10 கிலோமீட்டர் தூரம் பயணித்து, பின்னர் உடலை வீசி விட்டுச் சென்றுள்ளார்.
நிர்மல் சிங் என்ற அந்த நபரை கைது செய்து, கொலையல்லாத மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Comments