"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் அனைத்துத் தற்காலிக ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் சிலர் தொடுத்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கூட்டுறவுச் சங்கங்களில் தற்காலிகமாகப் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
வழக்குத் தொடுத்தவர்களுக்கு மட்டும் அல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என்றும், இந்தத் தீர்ப்பை 8 வாரத்தில் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Comments