இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் வீழ்ச்சியுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 250 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.
சில வாரங்களாக வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பால் பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றமடைந்து சென்செக்ஸ் வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது. இந்நிலையில் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 282 புள்ளிகள் சரிந்து 51 ஆயிரத்து 43 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தை நிப்டி 87 புள்ளிகள் சரிந்து 15 ஆயிரத்து 32 ஆக இருந்தது. வங்கிகள், நிதி நிறுவனங்கள், வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலை வீழ்ச்சியடைந்தது.
Comments