கால்வன் பள்ளத்தாக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டதை முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ள சீன ராணுவம்
கடந்த ஆண்டு நடைபெற்ற கால்வன் பள்ளத்தாக்கு மோதலில், தங்கள் வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டதாக சீனா முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.
கிழக்கு லடாக் எல்லையில் உருவான மோதல்போக்கின் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி கால்வன் பள்ளத்தாக்கில் எல்லையை காக்கும் முயற்சியில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஆனால், சீனா உயிரிழப்புகளை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
இருப்பினும், சுமார் 45 சீன ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தங்கள் தரப்பில் ஒரு ரெஜிமென்ட் கமாண்டர் மற்றும் 4 வீரர்கள் விவரங்களை குறிப்பிட்டு அவர்களது உயிர்தியாகத்தை சீன ராணுவம் பகிரங்கமாக அங்கீகரித்துள்ளது.
Comments