குக் வித் குட்டி...ஒரு மணிநேரத்தில் 172 உணவு வகைகள் சமைத்து அசத்திய குட்டி மாஸ்டர்

0 707

ஒரு மணிநேரத்தில் 172 உணவு வகைகளைச் சமைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் 9 வயது சிறுவன்

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள ஃபெரோக் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் ஹசனஸ் அப்துல்லா- ராஷா அப்துல்லா தம்பதி . தற்போது சென்னையில் குடும்பத்தோடு வசித்து வரும் இவர்களுக்கு ஹயன் அப்துல்லா என்ற 9 வயது மகன் உள்ளார்.

மூன்றாம் வகுப்பு படித்து வரும் ஹயனிற்கு 4 வயது முதலே சமையலில் மிகுந்த ஆர்வம் உண்டு. கிடைக்கும் நேரங்களில் எல்லாம், தன் தாய்க்கு உதவியாக அடுப்பறையில் பொழுதை போக்குவார் ஹயன். அவர் சமையல் மீது கொண்ட இந்த ஆர்வம் தான் அவரை ஆசியா சாதனை புத்தகத்திலும் , இந்திய சாதனை புத்தகத்திலும் இடம்பெறச் செய்துள்ளது.

ஒரு மணி நேரத்தில் 172 உணவுகளைச் சமைத்து அசத்தியுள்ளான் இந்த சுட்டி சிறுவன். பிரியாணி, ஜூஸ், சாக்லேட், தோசை என வித விதமாகச் சமைத்து சாதனை செய்த ஹயனிற்கு சமையல் மீது அதீத ஆர்வம் இருந்தாலும் எதிர்காலத்தில் பைலட் ஆக வேண்டும் என்பதே கனவு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments