14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நிறைவு: கோடிக்கணக்கில் ஏலம் போன வீரர்கள்
14ஆவது ஐபில் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நிறைவு பெற்றது. இதில், 145 கோடி ரூபாய்க்கு 57 வீரர்களை ஏலம் எடுக்கப்பட்டனர்.
ஐபில் வரலாற்றில் இல்லாத வகையில் அதிகபட்சமாக 16 கோடியே 25 லட்சத்திற்கு கிறிஸ் மோரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. கைல் ஜெமீசன் 15 கோடிக்கும், கிளன் மேக்ஸ்வேலை 14 கோடியே 25 லட்சத்திற்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹயே ரிச்சர்ட்சன் 14 கோடிக்கும், தமிழக வீரரான சாருக்கானை 5 கோடியே 25 லட்சத்திற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகபட்சமாக கிருஷ்ணப்பா கௌதமை 9.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
Comments