அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் மின்உற்பத்தி முடக்கம், பல ஊர்களில் மின்தடை
அமெரிக்காவில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக, மின்சாரம் இன்றி 34 லட்சம் மக்கள் தவிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். அந்நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவி வருகிறது.
வீடுகள், கார்கள், சாலைகள், மரங்கள் என அனைத்தும் உறை பனிக்குள் மூழ்கி கிடக்கின்றன. நீர்வீழ்ச்சிகளும் பனி சிற்பங்களாக உறைந்து காணப்படுகின்றன. குளிர் அதிகரிப்பதால் மின்சார தேவை அதிகரித்து உள்ளது.
ஆனால், பனிப்பொழிவால் மின் கட்டமைப்பு முடங்கி உள்ளதால், கடந்த நான்கு நாட்களாக சுமார் 34 லட்சம் மக்கள் மின்சாரமின்றி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மின்தடை காரணமாக பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன.
டெஸ்சாஸ் மாநிலத்திற்கு அவசர உதவிகளை உடனடியாக வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
Comments