படிக்கட்டு கொஞ்சம் உடஞ்சுருக்கு பாத்து போங்க... நேர்முகத் தேர்வர்களுக்கு அரசு அதிகாரியின் எச்சரிக்கை !

0 4503

தேனாம்பேட்டையில் ஊரக நலப்பணிகள் திட்ட இயக்குநரகத்தில் உடைந்திருந்த படிக்கட்டால் நேர்முகத் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் திட்ட இயக்குநகரத்தில், அலுவலக உதவியாளருக்கான நேர்முக தேர்வில் நூற்றுக்கனக்கானோர் கலந்து கொண்டனர். அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் அமர்ந்திருந்த தேர்வர்கள், ஒவ்வொருவராக மைக் மூலம் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

அப்போது மைக்கில் பேசிய ஊழியர் , நேர்முகத்தேர்வுக்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக வரிசையில் நின்று இடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசம் அணியவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் முதல் மாடியில் நடைப்பெறும் நேர்முகத்தேர்விற்கு செல்பவர்கள், படிக்கட்டு உடைஞ்சிருக்கு, பாத்து கவனமா போங்க என கூறியுள்ளார். உடைந்திருந்த படிக்கட்டுகளை சரி செய்யாமல் தேர்விற்கு வந்தவர்களை பாத்து பத்திரமாக போங்க என அறிவுரை வழங்கிய சம்பவம் தேர்வர்களை அதிர்ச்சியை அடைய செய்தது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments