தமிழகத்தில் தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை -தமிழக சுகாதாரத்துறை

0 2115
தமிழகத்தில் தேர்தல் பணியாளர்களுடன் ரெயில்வே துறையில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பணியாளர்களுடன் ரயில்வே துறையில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில்  இதுவரை 3 லட்சத்து 9 ஆயிரத்து 143 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் தேர்தல் அதிகாரிகள், பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு நடந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களுடன் ரயில்வே துறையில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாகவும்,  இதற்கு தேவையான தடுப்பு மருந்து எவ்வளவு என்பது குறித்து கணக்கெடுப்பு நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments