சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கான் ராணுவப் பெண் அதிகாரிகளுக்குப் பயிற்சி

0 6862
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவத்தைச் சேர்ந்த பெண் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவத்தைச் சேர்ந்த பெண் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பரங்கிமலைப் பயிற்சி மையத்தில் நட்பு நாடான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் 20 பேருக்கு ஜனவரி 18 முதல் ஆறு வாரக் காலப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

உடற்பயிற்சி, கவாத்து, ஆயுதப் பயிற்சி, தலைமைப் பண்பு, மனிதவள மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலத்தில் செய்தித் தொடர்பு, ராணுவ மேலாண்மை ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து வகைப் பயிற்சிகள், விளையாட்டுக்கள், தடை தாண்டுதல் ஆகியவற்றில் இவர்கள் ஆர்வம் காட்டுவதாகப் பயிற்றுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பயிற்சி வாய்ப்பை வழங்கிய இந்திய அரசுக்கு ஆப்கன் ராணுவப் பெண் அதிகாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments