தமிழகத்தில் 6 ஆக இருந்த கோவேக்சின் தடுப்பூசி மையங்கள் அதிகரிப்பு... சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

0 2227
கொரோனா தடுப்பூசியை விருப்பத்துக்கு ஏற்ப மக்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசியை விருப்பத்துக்கு ஏற்ப மக்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்று  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றார்.

இந்த 2 தடுப்பூசிகளில் எது வேண்டுமானாலும் விருப்பத்துக்கு ஏற்ப பயனாளிகள் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற அவர்,  சென்னையில் கோவேக்சின் தடுப்பூசிகளை அதிகமானோர் விரும்பி போட்டுக்கொள்வதாக கூறினார்.

இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 6 ஆக இருந்த கோவேக்சின் தடுப்பூசி மையங்கள் 22 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 25 மாவட்டங்களில் கோவேக்சின் தடுப்பூசி மையங்கள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments