வாட்சப் செயலியைப் போன்று 2 செயலிகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்
வாட்சப் செயலி போன்று தகவல்களை அனுப்ப 2 செயலிகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனியுரிமை கொள்கை மாற்றம், பேஸ்புக்கிற்கு தரவுகள் பகிரப்படும் என்று அறிவித்தது போன்ற விவகாரங்களால் வாட்சப் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த சூழலில் தகவல் திருட்டு போன்ற சர்ச்சைகளை தவிர்க்க, 2 செயலிகளை உருவாக்குதற்கான ஆரம்ப கட்ட பரிசோதனையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர மத்திய அரசு ஊழியர்களுக்கு என்றே பிரத்தியேகமாக ஒரு செயலியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
Comments