ஆஸ்திரேலியாவில் ஃபேஸ்புக் பக்கங்களில் செய்தி கன்டன்ட்டுகள் நீக்கம்?
ஆஸ்திரேலியாவில் செய்தி கன்டன்ட்டுகளை பயன்படுத்துவதற்கு ஊடக நிறுவனங்களுடன் ஒப்பந்தம்போட்டு பணம் தரவேண்டும் என்ற சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஃபேஸ்புக் பக்கங்களில் செய்தி கன்டன்ட்டுகள் முற்றாக நீக்கப்பட்டுள்ளன.
கூகுள் சர்ச் எஞ்சின் மற்றும் ஃபேஸ்புக் இரண்டிலும் செய்தி கன்டன்ட்டுகளை பயன்படுத்த உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு பணம் தரவேண்டும் என்ற சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
இதற்கு கூகுள், ஃபேஸ்புக் இரண்டுமே எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், கூகுள் ஊடக நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆனால், ஆஸ்திரேலியாவில் ஃபேஸ்புக் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, செய்தி கன்டன்டுகளை முற்றாக நீக்கிவிட்டது. இதற்கு அந்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், செய்தி தயாரிப்பு நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
Comments