இந்தியாவில் அமேசானின் செயல்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும்: அனைத்திந்திய வணிகர் கூட்டமைப்பு

0 3142
இந்தியாவில் அமேசானின் செயல்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும்: அனைத்திந்திய வணிகர் கூட்டமைப்பு

அமேசான் நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டு விதிகளை மீறி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அனைத்திந்திய வணிகர் கூட்டமைப்பு, அதன் செயல்பாட்டுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.

எட்டுக் கோடி வணிகர்களை உறுப்பினர்களைக் கொண்ட அனைத்திந்திய வணிகர் கூட்டமைப்பு மத்திய வணிக அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், அமேசான் நிறுவனம் ஒருசில நிறுவனங்களின் பொருட்களை விற்க முன்னுரிமை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீட்டு விதிகளை மீறிச் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், அதன் செயல்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள அமேசான் நிறுவனம், அரசின் விதிகளை முழுமையாகப் பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments