ஆண்டிப்பட்டியில் ஜவுளி பூங்கா... மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

0 2742
திமுக ஆட்சிக்கு வந்ததும் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஆண்டிப்பட்டியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஆண்டிப்பட்டியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் கோகிலாபுரம் விளக்கு பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மக்களிடம் குறைகளை கேட்டறிந்த, ஸ்டாலின், அதனை மனுவாகவும் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், குடிநீர் ஆதாரமான மூல வைகை ஆற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்டிப்பட்டியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், பெரியகுளம் பகுதியிலுள்ள 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிலை விவசாயிகளின் நலன் காக்க, தனியாக நலவாரியம் அமைக்கப்படுவதோடு, வெற்றிலையை பதப்படுத்த ஆலைகள் அமைக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

தொடர்ந்து, மக்களின் குறைகளை கேட்டறிந்ததோடு, பத்தாண்டுகளாக ஆட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், சொந்த தொகுதியையே கவனிக்க மறந்துவிட்டதாக குற்றம்சாட்டினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்த போது எல்லோரும், மருத்துவமனையில் தான் இருந்தார்கள் என்ற மு.க.ஸ்டாலின், இவர்களுக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments