தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

0 4129
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் 18-ம் தேதி முதல் வருகிற 22-ம் தேதி வரை, இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments