மாமியார் மீதுள்ள ஆசையால், மகளுடன் திருமணம்... கொலையில் முடிந்த தகாத உறவு!

0 393564
கொலை செய்த சோனு, கொலையான பாலமுருகன்

விழுப்புரத்தில் மாமியாரின் இரண்டாவது கணவரை கொலை செய்த மருமகனை போலீஸார் கைது செய்தனர்.

விழுப்புரம் நகராட்சி எதிரேயுள்ள ராஜகோபால் தெருவில் வசித்து வரும் சேகர் என்பவரின் மனைவி சித்ரா ( வயது 39). சேகர் இரண்டாண்டுக்கு முன் இறந்து விட்டார். சித்ராவுக்கு வயது 13 இருக்கும் போது சேகருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது, 39 வயதான சித்ராவுக்கு 24 வயதில் கவுசல்யா என்ற மகளும் 22 வயதில் சக்திவேல் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் கவுசல்யாவுக்கு திருமணமாகி விட்டது. சக்திவேலுக்கு திருமணமாகி தனியாக வசிக்கிறார். இதற்கிடையே, கவுசல்யாவின் கணவர் சோனு சர்மாவுக்கும் சித்ராவுக்கும் தகாத உறவு இருந்துள்ளது.

இந்த நிலையில், சித்ராவுக்கும், விழுப்புரம் காந்தி சிலை அருகில் உள்ள ஓட்டலில் பணிபுரியும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த பாலமுருகன் (வயது 26) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன்பு பாலமுருகனை சித்ரா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த சோனு சர்மா மாமியார் சித்ராவிடம் சென்று தகராறு ஏற்பட்டுள்ளார். அப்போது, தடுக்க முயன்ற பாலமுருகனை சோனு சர்மா கத்தியால் குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். பாலமுருகனை வெட்டுவதை தடுக்க முயன்ற சித்ராவுக்கும் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

மாமியாரின் இரண்டாவது கணவரை கொலை செய்து விட்டு தப்பிய சோனு சர்மாவை விழுப்புரம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸாரிடத்தில் அவன் கொடுத்த வாக்கு மூலத்தில், சித்ரா மீதிருந்த மயக்கத்தின் காரணமாகத்தான் அவரின் மகள் கவுசல்யாவை திருமணம் செய்ததாகவும், தன்னை ஏமாற்றி விட்டு இன்னோருவரை திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments