சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது

0 1535
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது

விருதுநகர் மாவட்டம் அச்சங்குளம் பட்டாசு ஆலையில் நடந்த கோர விபத்து தொடர்பாக ஆலையின் உரிமையாளரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 12-ம் தேதி அங்கு ஏற்பட்ட விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததுடன், 17 பேர் காயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆலை உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் என 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  நாகர்கோவிலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரியை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதுவரை விபத்து தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள குத்தகைதாரர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments