அமெரிக்க முன்னாள் அதிபருக்குச் சொந்தமான கட்டடம் வெடிவைத்து தகர்ப்பு

0 2776
அமெரிக்க முன்னாள் அதிபருக்குச் சொந்தமான கட்டடம் வெடிவைத்து தகர்ப்பு

மெரிக்காவில் முன்னாள் அதிபர் டிரம்ப் நடத்தி வந்த 34 மாடிகள் கொண்ட சீட்டாட்ட கிளப் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

நியூஜெர்சியில் உள்ள அட்லாண்டிக் சிட்டியில் 35 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கட்டடத்தை டிரம்ப் கட்டியதாகக் கூறப்படுகிறது. 614 அறைகள் கொண்ட இந்த கிளப்பில் 60 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் சீட்டாட்டங்கள் நடந்து வந்தன.

பின்னர் இந்த கட்டடத்தை டிரம்ப் விற்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை வாங்கியவர் புதிதாக வேறு கட்டடம் நிர்மாணிக்க விரும்பியதால் இதனை இடிக்க முடிவு செய்தார். இதையடுத்து வெடி வைத்து இந்தக் கட்டடம் தகர்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments