காஷ்மீரில் சதிவேலை செய்ய பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் கைது

0 1382
காஷ்மீரில் சதிவேலை செய்ய பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் கைது

காஷ்மீரில் சதிவேலைக்குத் திட்டமிட்டு மறைந்திருந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள படகுண்ட் மற்றும் தத்ஸாரா டிரால் கிராமங்களில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த 3 பேரை பிடித்து விசாரித்த போது, அவர்கள் தடைசெய்யப்பட்ட அமைப்பான ஹிஸ்புல்-முஜாஹிதீனைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வெடிகுண்டுகள் செய்யப் பயன்படுத்தும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments