உலகின் முதல் பறக்கும் காரில் பயணிகளை ஏற்றிச் செல்ல அமெரிக்க விமானத்துறை அனுமதி
உலகின் முதல் பறக்கும் காரில் பயணிகளை ஏற்றிச் செல்ல அமெரிக்க விமான போக்குவரத்துத் துறை அனுமதியளித்துள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட டெர்ராஃபூஜியா நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனம் விமானத்துடன் இணைக்கப்பட்டு பறந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 100 மைல் வேகத்தில் 10 ஆயிரம் அடி உயரம் வரை பறந்து செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில் 4 பேர் வரை பயணிக்கலாம் என்று கூறியுள்ள டெர்ராஃபூஜியா நிறுவனம் அடுத்த ஆண்டு விண்ணில் பறக்க அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் பறக்கும் கார் குறித்த கிராபிக்ஸ் வீடியோவையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Comments