கொரோனா தடுப்பு மருந்தை தந்து உதவுமாறு இந்தியாவிடம் ஈரான் கோரிக்கை..!
கொரோனா தடுப்பு மருந்தை தந்து உதவுமாறு இந்தியாவிடம் ஈரான் கோரியுள்ளது.
அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு மற்றும் பாரத் பயோடெக் தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கு நாட்டின் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக ஈரானில் உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் 229 லட்சம் டோஸ் கொரோனா மருந்தை உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்தியா வழங்கியுள்ளது. இவற்றில் 64 லட்சம் டோஸ் மருந்து மானியமாகவும், 165 லட்சம் டோஸ் வணிக அடிப்படையிலும் வழங்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா 150 நாடுகளுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
Comments