செவ்வாயில் இன்று தரையிறங்குகிறது நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் விண்கலம்!

0 3716
செவ்வாயில் இன்று தரையிறங்குகிறது நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் விண்கலம்!

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி இன்று செவ்வாயில் தரையிறங்குகிறது.

செவ்வாய் கோளில் உயிரினங்கள் வாழ்ந்தனவா, அதற்கான சுவடுகள் அங்கு எஞ்சியுள்ளனவா, எதிர்காலத்தில் உயிரினங்களை அங்கு குடியேறச் செய்யும் சாத்தியங்கள் உள்ளனவா என தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நாசா 5வது விண்கலத்தை ஏவியுள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன் ஏவப்பட்ட விண்கலம் 300 மில்லியன் மைல்கள் பயணித்து இன்று செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியை அடைந்துள்ளது. இந்த விண்கலத்தில் இருந்து தனியாகப் பிரிந்து சென்ற ஆய்வூர்தியான பெர்சிவரன்சை சுமந்து செல்லும் கோளவடிவான வாகனம் செவ்வாயின் வளிமண்டலத்தில் நுழைகிறது.

மணிக்கு 12 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த கோளத்தில் இருந்து பாராசூட் மூலம் ரோவர் பிரிக்கப்பட்டு பின்னர், அதிலிருந்தும் பெர்சிவரன்ஸ் பிரிந்து ஜெசீரோ கிரேட்டர் (Jezero Crater) எனும் பள்ளத்தில் ஆய்வு நடத்துகிறது. 

இந்நிலையில் விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக, செவ்வாய் கோளில், ஸ்பேஸ் ஹெலிகாப்டரை நாசா பறக்கவிட உள்ளது. Ingenuity என்று பெயரிடப்பட்ட சிறிய ஹெலிகாப்டர் ஒரு கிலோ 80 கிராம் மட்டுமே எடை கொண்டது. காற்று இல்லாத மற்றும் அடர்த்தி அதிகம் கொண்ட செவ்வாய் கிரகத்தில் Ingenuity பறப்பதற்கு பூமியில் ஒரு ஹெலிகாப்டரின் இறக்கைகள் சுழல்வதைவிட 8 மடங்கு அதிகவேகத்தில் சுழலும்.

நிமிடத்திற்கு 2 ஆயிரத்து 400 முறை எதிரெதிர் திசைகளில் சுழலும் 4 கார்பன்-ஃபைபர் பிளேடுகள் மூலம் பறந்து செல்லும் Ingenuity, பெர்சிவரன்சுடன் இணைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. ஆய்வுகளின் முடிவில் அளவிட முடியாத தகவல்கள் கிடைக்கலாம் என நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments