புதிய வீரியம் மிக்க கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை... புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது மத்திய அரசு
வீரியம் மிக்க புதிய கொரோனா இங்கிலாந்தில் பரவியதன் காரணமாக ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் பரவிய அதி தீவிரமான கொரோனா தொற்று இந்தியாவில் 186 பேருக்கு பரவி இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பிப்ரவரி 22 நள்ளிரவு முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.
பயணிகள் ஆன்லைன் மூலம் தங்களைப் பற்றிய சுயவிவரங்கள், உடல் நலம் குறித்த தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும். இந்தியாவில் விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் தங்கள் சொந்த செலவில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
Comments