காஷ்மீரில் வெளிநாட்டுத் தூதர்கள் தங்கியிருந்த ஓட்டல் அருகே தீவிரவாதிகள் தாக்குதல்

0 2989
காஷ்மீரில் வெளிநாட்டுத் தூதர்கள் தங்கியிருந்த ஓட்டல் அருகே தீவிரவாதிகள் தாக்குதல்

காஷ்மீரில் 23 நாடுகளின் தூதர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அருகில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வரும்நிலையில், வெளிநாடுகளின் தூதர்கள் 2 நாள் பயணமாக அங்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஸ்ரீநகர் சோன்வார் என்ற இடத்தில் வெளிநாட்டுத் தூதர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டுக்கு அருகே உணவகம் ஒன்றில் நுழைந்த தீவிரவாதிகள் உணவக உரிமையாளரைச் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகள் தப்பியோடி விட்டதாகவும், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அவர்களைத் தேடி வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments