பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் விரைவில் இந்தியாவுக்கு வர இருப்பதாகவும் , இருநாட்டு அதிகாரிகளும் அதற்கான தேதிகளை முடிவு செய்வார்கள் என்றும் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் ஏராளமான உடன்படிக்கைகளும் பகிர்தலும் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோவை மாஸ்கோவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வரதன் ஷ்ரிங்கலா இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஐநா.சபை, ஐநா,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு ரஷ்யாவின் ஆதரவு, கொரோனா தடுப்பு நடவடிக்கை போன்ற பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக ஹர்ஷ் வரதன் தெரிவித்துள்ளார்.
Comments