பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வுக்கு முந்தைய அரசின் தவறான கொள்கைகளே காரணம் என பிரதமர் மோடி சாடல்
நாட்டில், பெட்ரோல், டீசல் விலை சதத்தை நெருங்கிட்ட நிலையில், இதற்கு, முந்தைய அரசின் தவறான கொள்கைகளே காரணம் என, மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.
இந்தியா தனது எரிபொருள் தேவையில், 85 விழுக்காடு அளவிற்கு, இறக்குமதியை சார்ந்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் தேவையை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்திடும் வகையிலான திட்டங்களை, முந்தைய அரசுகள் முறையாக முன்னெடுத்து இருந்தால், தற்போது, நடுத்தர மக்கள் சிரமப்பட்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்றார்.
அனைவருக்கும் குறைந்த, கட்டுப்படுத்தப்பட்ட விலையில், எரிவாயு கிடைக்க "ஒரே நாடு, ஒரே எரிவாயு தொகுப்பு" என்ற இலக்கு எட்டப்படும் என்றும், அதற்கென புதிய நெட்வொர்க் கட்டமைப்படுவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
Comments