நிச்சயிக்கப்பட்ட திருமணம் பாதியில் நின்றதால் விரக்தி : பெண்ணின் ஆபாச வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்த கொடூரன்

0 42652
சென்னை ஓட்டேரியில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் பாதியில் நின்றதால் விரக்தியில் பெண்ணின் ஆபாச வீடியோக்களை நண்பர்களுக்கு பகிர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஓட்டேரியில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் பாதியில் நின்றதால் விரக்தியில் பெண்ணின் ஆபாச வீடியோக்களை நண்பர்களுக்கு பகிர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ஓட்டேரியை சேர்ந்த முகமது அசேன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த மாதம் 13-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மாப்பிள்ளையின் நடத்தை சரியில்லை என கூறி பெண்வீட்டார் திருமணத்தை ரத்து செய்ததோடு, வேறோரு இளைஞருடன் திருமணம் நிச்சயித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த முகமது அசேன், நிச்சயிக்கப்பட்ட போது அந்த பெண்ணுடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசிய வீடியோவை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் முகமது அசேனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments