மீன்வளத்துறைக்கென்று தனியாக அமைச்சகம் இருப்பது கூட தெரியாத ராகுல்காந்தி - கிரிராஜ் சிங் வியப்பு
மீன்வளத்துறைக்கென்று தனியாக அமைச்சகம் இருப்பது கூட தெரியாமல் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுவதாக அந்த துறையின் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மீனவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, விவசாயிகளுக்கு மத்திய அமைச்சகம் உள்ளதை போல, கடல் விவசாயிகளான மீனவர்களுக்கு தனியாக ஏன் அமைச்சகம் இல்லை என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்த கிரிராஜ் சிங், 2019ஆம் ஆண்டிலேயே மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்திற்கென்று தனியாக அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டு, அதற்கு தாம் அமைச்சராக இருந்து வருவதாக கூறியுள்ளார்.
Comments