கடந்த 24 மணி நேரத்தில் 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா மரணம் இல்லை - மத்திய சுகாதார அமைச்சகம்
ஆந்திரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்பட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, ஏறத்தாழ 90 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களில் சுகாதாரப் பணியாளர்கள் 2 லட்சத்து 76 ஆயிரம் பேருக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 57 சதவீதம் பேர் உத்தரப்பிரதேசம் உள்பட 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
Comments