தோசையை சுட்டுதான் பார்த்திருப்போம்... ஆனால் இங்கு தோசை பறக்குது : வாடிக்கையாளர்களை கவரும் இளைஞர்

0 60518

தோசையை சுட்டுதான் பார்த்திருப்போம் ஆனால் மும்பை மங்கல்தாஸ் மார்க்கெட்டில் உள்ள ஸ்ரீபாலாஜி கடையில் தோசை பறக்கிறது.

விறுவிறுப்பாக தோசை கல்லில் தோசை சுடும் இளைஞர் நேரடியாக அதனை வாடிக்கையாளரின் தட்டுக்கே வீசுகிறார்.ஸ்ட்ரீட் ஃபுட் ரெசிபீஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த வாரம் பகிரப்பட்ட, இந்த பறக்கும் தோசை வீடியோ 8 கோடியே 40 லட்சம் பேரால் கவனம் பெற்றுள்ளது. மேலும் 13 லட்சம் பேர் இந்த வீடியோவிற்கு லைக் போட்டுள்ளனர்.

வாடிக்கையாளர்களை கவருவதற்காக இப்படி செய்தாலும், உணவை பறக்கவிடுவது அவமரியாதை என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments