குஜராத் : வடோதரா மாநகராட்சி தேர்தலில் வென்றால், பெண் தோழிகளுடன் பொழுதுபோக்க, பார்ட்டி நடத்தவும் வசதியாக இளைஞர்களுக்கு காதலர் மையம் - காங்கிரசின் அதிரடி வாக்குறுதி
குஜராத் மாநிலம் வடோதராவில், மாநகராட்சி தேர்தலில், வென்றால் இளைஞர்கள் தங்களது பெண் தோழிகளுடன் பொழுதுபோக்கவும், பார்ட்டி நடத்தவும் வசதியாக காபி ஷாப்கள் மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
மாநகராட்சி தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் மாநகராட்சியை கைப்பற்றினால், இளைஞர்கள் தங்களது பெண் தோழிகளுடன் பொழுதுபோக்க மாநகராட்சி சார்பில் காபி ஷாப் அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காதலர்கள் சந்திக்கும் இடமாகவும் இந்த காபி ஷாப்கள் இருக்கும் எனவும், இன்றைய காலகட்டத்திற்கு இது மிகவும் அவசியம் எனவும் வடோதரா நகர காங்கிரஸ் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
Comments