நான் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி, என பெட்டி கடை உரிமையாளரின் வீட்டில் 20 சவரன் நகை திருட்டு ... எடப்பாடியில் டிப் டாப் ஆசாமியின் நாடகம்

0 1427

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி போல் நாடகமாடி, பெட்டி கடை உரிமையாளரின் வீட்டில் 20 சவரன் நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் வீட்டிலேயே பெட்டிக்கடை வைத்துள்ளார். அவரது கடைக்கு வந்த டிப் டாப் ஆசாமி, அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளை கேட்டுள்ளார்.

அதனை கோவிந்தராஜ் கொடுத்ததும், தான் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எனக் கூறிய அந்த நபர் வீட்டில் புகுந்து சோதனையிட்டுள்ளார். மேலும், கோவிந்தராஜ் மீது வழக்கு பதியாமல் இருக்க 1000 ரூபாய் லஞ்சமாக வாங்கியுள்ளார். அவர் அங்கிருந்து சென்றதும், பீரோவை திறந்து பார்த்த போது 20 சவரன் நகை மாயமானது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments