உயிருக்குப் போராடிய 2 பேரின் உயிரைக் காப்பாற்றிய 18 வயதான இளம்பெண் ; இளம்பெண்ணின் துணிச்சலுக்கு முதலமைச்சர் பாராட்டு

0 2981
மத்தியப் பிரதேசத்தின் சித்தி பகுதியில் நேற்று பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்த போது, 18 வயதான இளம்பெண் ஒருவர், துணிச்சலுடன் செயல்பட்டு 2 பேரின் உயிரை காப்பாற்றி இருக்கிறார்.

மத்தியப் பிரதேசத்தின் சித்தி பகுதியில் நேற்று பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்த போது, 18 வயதான இளம்பெண் ஒருவர், துணிச்சலுடன் செயல்பட்டு 2 பேரின் உயிரை காப்பாற்றி இருக்கிறார்.

விபத்து நிகழ்ந்ததைப் பார்த்ததும், அருகே குடிசையில் வசித்து வரும் ஷிவ்ராணி லுனியா என்ற இளம்பெண், சற்றும் தாமதிக்காமல் 30 அடி ஆழமுள்ள கால்வாய்க்குள் இறங்கி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண் ஒருவரையும், வயதான ஆண் ஒருவரையும் நீச்சலடித்தபடி இழுத்துக்கொண்டு கரைக்கு வந்தார்.

அவரது இந்த செயலுக்குப் பாராட்டு தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், மாநிலமே அவரால் பெருமை கொள்வதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

50 பேரை பலிகொண்ட விபத்தில் 6 பேர் மட்டும் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments