கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கவில்லை: தென்னாப்பிரிக்கா விளக்கம்
சீரம் இந்தியா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துகளை, திரும்ப ஒப்படைக்கப்போவதாக வெளியான தகவலை தென்னாப்பிரிக்கா மறுத்துள்ளது.
அதிதீவிர தன்மையுடன் உருமாறிய கொரோனா வைரஸை எதிர்கொள்வதில் சீரம் இந்தியா நிறுவனத்தின் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி மருந்து, பயனளிக்கவில்லை எனக் கூறி, அதன் பயன்பாட்டை தென்னாப்பிரிக்கா நிறுத்தியது.
அத்துடன் 10 லட்சம் டோஸ்களை, இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்க போவதாக செய்திகள் கசிந்த நிலையில், அதற்கு அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்வெலி மெக்கய்ஸ் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி மருந்துகள் ஆப்பிரிக்க யூனியனிடமிருந்தே தாங்கள் வாங்கியதாக அவர் விளக்கமளித்தார். ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின்,கொரோனா தடுப்பூசி மருந்தை இன்றுமுதல் பயன்படுத்த தென்னாப்பிரிக்கா திட்டமிட்டுள்ளது.
Comments